உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஐ.டி., கார்டு

ஆலந்தூர்: புழுதிவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 760 மாணவ, மாணவிகளுக்கு தனியார் பள்ளிகளை போல ‘பிளட் குரூப்’ உடன் அடையாள அட்டை வழங்கப்பட்டது. நடிகர் கோவை அனுராதா நடத்தி வரும் ‘கல்விக்கு உதவுங்கள்’ என்னும் அமைப்பு, கடந்த ஓராண்டாக செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் சார்பில், பல்வேறு அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக, அரசு பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி  அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான உதவிகளை இந்த அமைப்பு செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்