பி.இ.: தாழ்த்தப்பட்டவர்களுக்கு அருந்ததியர் சேராத இடங்கள்!
இதற்கான கவுன்சிலிங் ஆகஸ்ட் 12ம் தேதி நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் அன்றைய தினம் காலை 9 மணியிலிருந்து 10 மணிக்குள் கவுன்சிலிங் அரங்கில் தங்களது வருகையைப் பதிவு செய்ய வேண்டும். ஏற்கெனவே தாங்கள் பெற்ற ஒதுக்கீட்டு ஆணை மற்றும் அசல் சான்றிதழ்களையும் எடுத்து வர வேண்டும். இந்த கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள புதிதாக விண்ணப்பிக்க முடியாது. ஏற்கெனவே விண்ணப்பித்தவர்கள் இந்தக் கவுன்சிலிங்கில் சேரலாம். இந்தக் கவுன்சலிங் மூலம் புதிய கல்லூரிகளைத் தேர்வு செய்யும் மாணவர்கள், ஏற்கெனவே கவுன்சிலிங் மூலம் பெற்ற அட்மிஷன் ஆணையை ஒப்படைக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பிளஸ2 தேர்வில் பெயிலானவர்கள் மீண்டும் துணைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் இன்ஜினியரிங் கல்லூரிகளில் சேருவதற்கான கவுன்சிலிங் ஆகஸ்ட் 11ம் தேதி நடைபெறுகிறது.