இடைநிலை ஆசிரியர்களுக்கு இரண்டாம் கட்ட சரிபார்ப்பு
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்புஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 1,943 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, கடந்த 6, 7ம் தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு முதற்கட்டமாக நடத்தப்பட்டது.தற்போது வேலைவாய்ப் புத்துறையில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட, விடுபட்ட பணி நாடுனர்களுக் கான சான்றிதழ் சரிபார்ப்பு நாளை இரண்டாம் கட்டமாக நடக்கிறது. தமிழகத்தில் உள்ள 30 மாவட்டத் தலைநகரங்களில் முதன்மை கல்வி அலுவலரால் நிர்ணயிக்கப் பட்ட மையங்களில் இப் பணி நடக்கிறது. பரிந்துரைக்கப்பட்ட பணி நாடுனர்களுக்கு, சான்றிதழ் சரி பார்த்தலுக்கான அழைப்புக் கடிதம் தனித்தனியே அனுப்பப் பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் www.trb.tn.nic.in வெளியிடப் பட்டுள்ளது.இதுவரை அழைப்புக் கடிதம் கிடைக்காதவர்கள் இணையதளத்தில் இருந்து தங்களது விவரங்களை நகல் எடுத்து, சான்றிதழ் சரிபார்க்கும் மையத்தில் விவரம் தெரிவித்து, சான்றிதழ் சரிபார்த்தலில் கலந்து கொள்ளலாம்.