உள்ளூர் செய்திகள்

புதிய கல்வி கொள்கை தலைவர்கள் கருத்து

சென்னை: புதிய கல்விக் கொள்கையை, மறு ஆய்வு செய்ய வேண்டும் என, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.தி.மு.க., மகளிர் அணி செயலர், கனிமொழி: பள்ளிகளிலும், உயர் கல்வி நிறுவனங்களிலும் உள்ள பாடத்திட்டத்தில், சமஸ்கிருதம் சேர்க்கப்படுகிறது. இதை, சகித்துக் கொள்ள முடியாது.தமிழக காங்கிரஸ் தலைவர், கே.எஸ்.அழகிரி: ஹிந்தி, சமஸ்கிருத மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால், மக்களிடையே பிளவு மனப்பான்மையை வளர்க்கும். ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ: பன்முகத் தன்மை, கூட்டாட்சி கோட்பாடுகளை சீர்குலைக்கும், புதிய கல்விக் கொள்கையை மறு ஆய்வு செய்ய வேண்டும்.பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி: எட்டாம் வகுப்பு வரை பொதுத் தேர்வு, மும்மொழிக் கொள்கை தேவையற்றது. புதிய கல்விக் கொள்கையை திருத்தி எழுத வேண்டும்.வி.சி., தலைவர் திருமாவளவன்: அனைத்து தரப்பினரும் படிக்கக் கூடாது என்பதே, தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம். அனைத்துக் கட்சி கூட்டத்தை, முதல்வர் உடனே கூட்ட வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்