உள்ளூர் செய்திகள்

வேளாண்மை படிப்புகளுக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலை!

இப்பல்கலைக்கழகம், 10 இளநிலைப் பட்டப்படிப்புகளை 14 உறுப்பு மற்றும் 27 இணைப்புக் கல்லூரிகள் மூலம் வழங்குகிறது.வழங்கப்படும் இளநிலை படிப்புகள்:பி.எஸ்சி.,-(ஹானர்ஸ்) அக்ரிகல்ச்சர்- 3,105 இடங்கள், பி.எஸ்சி., -(ஹானர்ஸ்) ஹார்ட்டிகல்ச்சர்-360 இடங்கள், பி.எஸ்சி., -(ஹானர்ஸ்) புட், நியூட்டிரிஷன் அண்ட் டயட்டிக்ஸ்-45 இடங்கள், பி.எஸ்சி., -(ஹானர்ஸ்) பாரஸ்ட்ரி-45 இடங்கள், பி.எஸ்சி., -(ஹானர்ஸ்) செரிகல்ச்சர்-30 இடங்கள், பி.டெக்., -அக்ரிகல்ச்சர் இன்ஜினியரிங்-110 இடங்கள், பி.டெக்.,-பயோடெக்னாலஜி-55 இடங்கள், பி.எஸ்.,-அக்ரிபிசினஸ் மேனேஜ்மெண்ட்-45 இடங்கள், பி.டெக்.,-புட் டெக்னாலஜி-55 இடங்கள், பி.டெக்.,-எனர்ஜி அண்ட் என்விரான்மென்டல் இன்ஜினியரிங்-55 இடங்கள்.முதுநிலை படிப்புகள்:அக்ரிகல்ச்சர் துறையின் கீழ், அக்ரி பிசினஸ் மேனேஜ்மெண்ட், அக்ரோனமி, பயோடெக்னாலஜி, எக்னாமிக்ஸ், என்விரான்மெண்டல் சயின்சஸ் உட்பட பல்வேறு பிரிவுகளில் முதுநிலை பட்டப்படிப்பு வழங்கப்படுகின்றன.  இவைதவிர, ஹார்ட்டிகல்ச்சர், அக்ரிகல்ச்சுரல் இன்ஜினியரிங், பாரஸ்ட்ரி, ஹோம் சயின்ஸ் ஆகிய துறைகளிலும் முதுநிலை பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.கல்வித்தகுதி:12ம் வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவை படித்திருக்க வேண்டும். பொதுவாக, இயற்பியல், வேதியியல் பாடங்களை படித்திருக்க வேண்டும் என்றாலும், சில படிப்புகளுக்கு கணிதம் மற்றும் உயிரியல் பாடங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. விரிவான கல்வித்தகுதி தகவல்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தைப் பார்க்கலாம்.சிறப்பு இடஒதுக்கீடு:முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், சுதந்திர போராட்ட தியாகிகளின் சந்ததியினர், விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு சிறப்பு இடஒதுக்கீடு உண்டு.மாணவர் சேர்க்கை முறை:12ம் வகுப்புத் தேர்வில் மாணவர்கள் பெற்றுள்ள மதிப்டிபண்களை அடிப்படையாகக் கொண்டு தரவரிசைப்பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, ஆன்லைனில் நடைபெறும். சிறப்பு இட ஒதுக்கீடுகளுக்கு மட்டும் தனியாக நேரடி கலந்தாய்வு நடத்தப்படும். எனினும், அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும்.  விண்ணப்பிக்கும்  முறை:பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். சிறப்பு ஒதுக்கீட்டு இடங்களுக்கு நேரில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பு: இளநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் விரைவில் வெளியிட உள்ளது.விபரங்களுக்கு: www.tnau.ac.in 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்