உள்ளூர் செய்திகள்

ஆன்லைனில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

சென்னை: &'ஆன்லைன்&' வாயிலாக, தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி அளிக்கப்படுகிறது. விருப்பமுள்ளோர் சேர்ந்து பயன் பெறலாம்.மத்திய அரசின் மத்திய பனை பொருட்கள் நிறுவனம், காதி கிராம தொழில் வாரியம் சார்பில், திறன் மேம்பாட்டு பயிற்சியாக, சென்னை, வேலுார் மற்றும் திருநெல்வேலியில், ஆன்லைன் வாயிலாக, தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி அளிக்கப்படுகிறது. வரும், 24ம் தேதி முதல், 10 நாட்கள் நடக்க உள்ள இந்த பயிற்சியில், தங்கத்தின் விலை கணக்கிடுதல், கொள்முதல் செய்யும் முறை, தரம் அறிதல், கடன் தொகை வழங்கும் முறை போன்றவற்றை கற்றுக் கொடுக்க உள்ளனர். இதற்கு கல்வித்தகுதி, எட்டாம் வகுப்பு தேர்ச்சி. இதில், 18 வயது நிரம்பிய, இருபாலரும் பங்கேற்கலாம். பயிற்சிக்கான கட்டணம், 6,254 ரூபாய்.செய்முறை பயிற்சி முடித்தோருக்கு, மத்திய அரசின் சான்றிதழ் வழங்க உள்ளனர். பயிற்சி முடித்தவர்கள், தேசிய கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகள், நகை அடகு நிதி நிறுவனங்களில், நகை மதிப்பீட்டாளராக பணியில் சேரலாம்.மேலும் விபரங்களுக்கு, 94437 28438 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்