உள்ளூர் செய்திகள்

உயர்கல்வி மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்!

சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் நடைபெற்ற தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் ஸ்டானி பேசியதாவது: தற்போது நாம் அனைத்துத் துறைகளிலும் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளுடன் போட்டியிட வேண்டியுள்ளது. எனவே, கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும் கல்வியின் தரத்திற்கும் முக்கியத்துவம் தர வேண்டும்.ஜப்பான், ரஷ்யா போன்ற நாடுகள் முன்னேற அவர்கள் பின்பற்றும் தாய் மொழி வழிக் கல்வியே முக்கிய காரணம். நாமும் மாணவர்களின் சிந்தனைத் திறனை வளர்க்கும் வகையில் உயர்கல்வியில் தமிழுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். அதேசமயம், மாணவர்களின் ஆங்கில அறிவு, ஆளுமைத் திறன் ஆகியவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும். அறிவியல் துறையில் இதுவரை மூன்று தமிவர்கள் நோபல் பரிசு பெற்றுள்ளனர். அவர்களில் சர். சி.வி. ராமனை தவிர, மற்ற இருவர் வெளிநாடுகளில் உயர்கல்வி கற்றவர்கள்.இந்தியாவில் உயர்கல்வி பயில்பவர்கள்அதிக நோபல் பரிசு பெற வேண்டும். அதற்கு ஆராய்ச்சி படிப்புகளுக்குப் பல்கலைக்கழகங்கள் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.குடும்பச் சூழலால் படிக்க வேண்டிய வயதில் கல்வி கற்க முடியாதவர்களுக்காக, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் துவங்கப்பட்டது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு பட்டம் பெறுபவர்களுக்கு என் வாழ்த்துகள்.தமிழகத்தில் தற்போது 13 சதவீதம் பேர் உயர்கல்வி பயில்கின்றனர். இதை வரும் 2020ம் ஆண்டுக்குள் 25 சதவீதமாக உயர்த்த வேண்டும். இந்த இலக்கை அடைய தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் உரிய பங்களிக்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசுகையில், திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் பட்டம் பெறுபவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் இடம் தரக்கூடாது என ஐகோர்ட் கூறியுள்ளது. குறைந்தபட்சம் தாங்கள் பணிபுரியும் துறையில் இவர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்க கவர்னர் ஆவன செய்ய வேண்டும் என்றார்.துறையில் முதலிடம் பிடித்த 131 பேருக்கு கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா தங்கப் பதக்கம் வழங்கினார். பட்டமளிப்பு விழா சிறப்பு மலரை கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா வெளியிட துணை முதல் அமைச்சர்  ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.மின் ஆளுகையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள மாணவர்களின் விவரத் தொகுப்பையும் ஸ்டாலின் வெளியிட்டார். சமுதாயக் கல்லூரிகளில் பயிலும் பத்துப் பேருக்கு அமைச்சர் பொன்முடி உதவித் தொகை வழங்கினார். விழாவில் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கல்யாணி அன்புச் செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்