தேசிய திறனறிதல் தேர்வு: நுழைவுச்சீட்டு பதிவிறக்கம்
அரசுப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான, தேசிய வருவாய்வழி மற்றும் திறனறிதல் தேர்வு, பிப்., 21ம் தேதி நடக்கிறது. இத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, அவர்களின் மேல்நிலை கல்வி முடியும் வரை, உதவித்தொகை வழங்கப்படுகிறது.தேர்வுக்கான மாணவர்களின் பெயர்பட்டியல், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.மேலும், தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை, அரசு தேர்வுத்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, உரிய தேர்வர்களிடம் ஆசிரியர்கள் வழங்க வேண்டும். தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளில் பெயர், புகைப்படம் பிறந்த தேதி உள்ளிட்டவற்றில் திருத்தங்களை மேற்கொள்வது குறித்தும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.