உள்ளூர் செய்திகள்

மத்திய அரசு திட்டத்தில் அடிப்படை கல்வி

ஊட்டி: மத்திய அரசின், கற்போம் எழுதுவோம் திட்டத்தில், நீலகிரி மாவட்டத்தில், அடிப்படை கல்வி வழங்கப்பட்டு வருகிறது. ஊட்டி மற்றும் கூடலுார் கல்வி மாவட்டத்தில், இதற்காக அமைக்கப்பட்ட, 163 மையங்களில், 18 வயதுக்கு மேற்பட்ட, அடிப்படை கல்வி அறிவு இல்லாத, 5,000 பேருக்கு கல்வி வழங்கும் பணி துவங்கியது.முதன்மை கல்வி அலுவலர் நசருதீன் கூறுகையில், &'&'நீலகிரி மாவட்டத்தில், 163 அரசு பள்ளிகளில், தன்னார்வலர்கள் வாயிலாக கற்பிக்கும் பணி நடந்து வருகிறது. மாலை, 4:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரை பாடங்கள் நடத்தப்படுகிறது. மூன்று மாதம் பாடம் கற்பித்து தேர்வு நடத்தப்படும். இத்திட்டத்தில் பலர் சேர்ந்து அடிப்படை கல்வி அறிவை பெற்று வருகின்றனர்,&'&' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்