உள்ளூர் செய்திகள்

மாவட்டம் தோறும் ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையம்

மாநிலத்தில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., பயிற்சி மையங்கள் அமைக்க வேண்டும் என, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் ஏ.எம்.காசிவிஸ்வநாதன் கூறியுள்ளார். கிருஷ்ணகிரி ஆண்கள் அரசு கலைக்கல்லூரியில் கிராமப்புற ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தை துவக்கி வைத்து கூறியதாவது: இப்பயிற்சி மையத்தின் வெப் சைட் தீதீதீ.டுணூடிண்டணச்ஞ்டிணூடி.tண.ணடிஞி.டிண  கிராமப்புற மாணவர்கள், நகர்ப்புற மாணவர்களுக்கு இணையாக திறமையை வளர்க்க இம்மையம் உதவும். இப்பயிற்சி மையத்தில் சேர்வதற்கான எழுத்து தேர்வில் கர்நாடகா மற்றும் தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளிலிருந்தும் 165 பேர் கலந்துகொள்கின்றனர். இதில் 35 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கான மாதிரி போட்டி தேர்வுகள் இக்கல்லூரி வளாகத்தில் நடத்தப்படும். இதற்கு கடுமையான படிப்பு மிகவும் அவசியம். ஒரு நாளைக்கு குறைந்தது 12 மணி நேரமாவது படிக்க வேண்டும். மீதமுள்ள நேரத்தில் புத்தகம், பத்திரிகை, ‘டிவி’., யில் வரக்கூடிய செய்திகள் மற்றும் பொது அறிவு சம்பந்தமானவற்றை தொடர்ந்து படிக்க வேண்டும். கிராமப்புற மாணவர்கள் டி.என்.பி.எஸ்.சி., மற்றும் மற்ற தேர்வு சம்பந்தமான கருத்துகளை பலரிடம் பேசும் போது அதிகமான வாய்ப்புகள் கிடைக்கும். டி.என்.பி.எஸ்.சி., மாதிரியே மத்திய, மற்ற மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு வாரியத்தின் தேர்வுகளிலும் கலந்துகொள்ள வேண்டும். டி.என்.பி.எஸ்.சி., தேர்வின் வினாத்தாளை மற்ற நபர்களுடன் கலந்து ஆலோசித்து சரியான விடையை கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்