கல்லுாரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு தொடரும்
சென்னை: கல்லுாரி மாணவர்களுக்கு, ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும் என, பல்கலைகள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, உயர்கல்வி துறை அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், கல்லுாரிகளில் நேரடி வகுப்புகளுக்கு, இன்னும் அரசு அனுமதி அளிக்கவில்லை. பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மட்டும், தினமும் கல்லுாரிகளுக்கு வந்து, அங்கிருந்தவாறு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்த வேண்டும்.இறுதி &'செமஸ்டர்&' மாணவர்களுக்கும், தற்போது நேரடி வகுப்புகள் நடைபெறவில்லை. அரசு அனுமதித்தால் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். எனவே, தற்போதைய நிலையில் அனைத்து மாணவர்களுக்கும், ஆன்லைனிலேயே வகுப்பும், தேர்வும் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.