உள்ளூர் செய்திகள்

திருப்பதியில் புதிய மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல்

நகரி: திருப்பதி ரேணிகுண்டா அருகே, ஸ்ரீபத்மாவதி மருத்துவக் கல்லூரி புதிதாக கட்டப்பட உள்ளது. காஞ்சி காமகோடி பீடமும், வெங்கடேஸ்வரா விஞ்ஞான மருத்துவ பல்கலைக் கழகமும் இணைந்து, 60 ஏக்கரில், ஆந்திர மாநிலம், ரேணிகுண்டா அடுத்த குந்ர காலுவ கிராமம் அருகே, புதிய மருத்துவக் கல்லூரி தொடங்குகின்றன. நேற்று முன்தினம் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில், முதல்வர் ரோசய்யா கூறியதாவது:இந்த புதிய மருத்துவக் கல்லூரியில், 150 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும். இதன்மூலம், இப்பகுதி மக்களுக்கு நவீன மருத்துவ வசதிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. மறைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டி காட்டிய முன்னேற்றப் பாதையில், மாநிலத்தில் மேம்பாட்டு திட்டங்கள் அமல்படுத்தபடுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்