உள்ளூர் செய்திகள்

மாணவர்களிடம் கூடுதல் பணம் வசூலிக்கக் கூடாது

சென்னை: &'மாணவர்களிடம் கூடுதல் பணம் வசூலிக்கக் கூடாது&' என, அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பும்படி, பள்ளி கல்வி கமிஷனருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை, அனகாபுத்துார் அரசு மேல்நிலைப் பள்ளி பெற்றோர் - ஆசிரியர் சங்கத் தலைவர் முரளிதரன் தாக்கல் செய்த மனு:&'அரசு பள்ளியில் சேருவதற்கு விண்ணப்பங்கள் அளிக்கும் போது, மாணவர்களிடம் இருந்து கட்டணம் எதுவும் வசூலிக்கக் கூடாது&' என, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அதற்கு முரணாக, ஒவ்வொரு விண்ணப்பத்துக்கும் 100 ரூபாய், பள்ளி தலைமை ஆசிரியை வசூலிக்கிறார். ஏழை மாணவர்களிடம் 100 ரூபாய் இல்லை என்றால், விண்ணப்பம் வழங்க மறுக்கின்றனர்.விண்ணப்பம் வழங்கும் போது, மாணவர்கள், பெற்றோரிடம் இருந்து பணம் வசூலிப்பதற்கு, தலைமை ஆசிரியைக்கு தடை விதிக்க வேண்டும்; அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவை விசாரித்த, நீதிபதி டி.கிருஷ்ணகுமார் பிறப்பித்த உத்தரவு:ஒரு வாரத்தில், மாவட்ட கல்வி அதிகாரிக்கு மனு அனுப்ப வேண்டும். குற்றச்சாட்டுக்களை விசாரித்து, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.பெற்றோர் - -ஆசிரியர்சங்கத்துக்கான சந்தாவாக 50 ரூபாய் தவிர்த்து, வேறு எதுவும் வசூலிக்கக் கூடாது என, முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.மாணவர்களிடம் இருந்து கூடுதலாக பணம் வசூலிக்கக் கூடாது; இதை கண்டிப்புடன் பின்பற்ற தவறினால், சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியருக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என, அனைத்து பள்ளிகளுக்கும், பள்ளி கல்வி கமிஷனர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை ஜூலை 14க்கு தள்ளி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்