தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறையை நீக்க வலியுறுத்தல்
ஆயக்குடி: ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறையை நீக்க கோரிக்கை எழுந்துள்ளது.தற்போது இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு (டி.இ.டி) நடைமுறையில் உள்ளது. தமிழகத்தில் தற்போது 12 ஆம் வகுப்பு, பி.எட், டி.இ.டி., தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண்களை கணக்கிட்டு வெயிட்டேஜ் முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால் 1990 களில் படித்த மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.கடந்த இரண்டு ஆண்டுகளாக நோய்த்தொற்று காரணமாக ஆல்பாஸ் முறை பின்பற்றப்பட்டு வருகிறது. எனவே, டி.இ.டி., தேர்வில் வெயிட்டேஜ் முறையை நீக்க வேண்டும். பி.ஜி.டி.ஆர்.பி., தேர்வை போல டி.இ.டி.,தேர்வில் பெறும் மதிப்பெண்களைக் கொண்டு பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, ஆயக்குடி இலவச பயிற்சி மைய இயக்குனர் ராமமூர்த்தி வலியுறுத்தினார்.