உள்ளூர் செய்திகள்

ஜெ., பல்கலை தேவையில்லாதது: அமைச்சர் பொன்முடி

விழுப்புரம்: ஜெ.ஜெ., பல்கலைக்கழகம் தேவையில்லாத ஒன்று, என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறினார். விழுப்புரத்தில் அவர் கூறியதாவது:ஜெ.ஜெ., பல்கலைக் கழகம் என்ற பெயரில், ஏற்கனவே நாகப்பட்டினத்தில் மீன்வள பல்கலைக் கழகம் உள்ளது. ஜெ.ஜெ., பல்கலையை எங்கும் துவங்காமல், பெயருக்கு அறிவிக்கப்பட்டது. மாணவர்களுக்கு மிகவும் பயன் அளிக்கக்கூடிய வகையில் உள்ள அண்ணாமலை பல்கலையை ஒரு இணைப்பு பல்கலையாக மாற்றிஉள்ளோம். ஜெ.ஜெ., பல்கலை தேவையில்லாத ஒன்று. நுாறாண்டுகளாக உள்ள அண்ணாமலை பல்கலையுடன் இணைப்பதைத்தான் விழுப்புரம்,கள்ளக்குறிச்சி, கடலுார், மயிலாடுதுறை மாணவர்கள் விரும்புவர்.முன்னாள் முதல்வர், அவசரத்தில் போகிற நேரத்தில் பெயர் வைப்பதற்காக, ஜெ.ஜெ., பல்கலையை அறிவித்துள்ளார். விழுப்புரம் கோவில் குளத்திற்கு அம்மா குளம் என பெயர் வைத்துள்ளனர். பெயர் வைப்பது என்பது அவர்களுக்கு ஒரு &'பேஷன்!&'உயர் கல்வி வளர்ச்சிவிழுப்புரத்தில் அண்ணா பல்கலை பொறியியல் கல்லுாரி, அரசு மருத்துவக் கல்லுாரி, அரசு கலைக் கல்லுாரியில் முதுகலை பாடப்பிரிவு கொண்டு வந்தது கருணாநிதி ஆட்சியில் தான்.இது கல்வி வளர்ச்சிக்காக எடுக்கப்படும் முடிவு. இந்த நான்கு மாவட்டங்களில் உள்ள கல்லுாரிகளும், அண்ணாமலை பல்கலையில் இணைக்கப்படுகின்றன. இந்த நடவடிக்கை உயர்கல்வியின் வளர்ச்சிக்காக செய்யப்பட்டதே தவிர, பெயருக்காக அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்