உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்: நீட் பித்தலாட்டம்

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:கே.நாகலட்சுமி, விழுப்புரத்தில் இருந்து அனுப்பிய, &'இ - மெயில்&' கடிதம்: &'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், &'நீட்&' தேர்வு ரத்து செய்யப்படும்&' என, அக்கட்சி தலைவர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். ஆனால் அவருக்கு, நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்பது நன்கு தெரியும். ஆட்சிக்கு வந்த பின், நீட் தொடர்பான கேள்வி எழும் என்பதால், அந்த தேர்வால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு அமைத்து, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.அந்த குழு அமைக்க மக்களின் வரிப்பணம் செலவிடப்பட்டது. நீட் தேர்வை அறிமுகப்படுத்தியது, அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரசும், அதன் கூட்டணி கட்சியான தி.மு.க.,வும் தான். நீட் தேர்வை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டது. அப்போது, &'நீட் தேர்வு அவசியம்&' என வாதாடி, அதை தமிழகத்திற்கு பெற்று தந்தவர், காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி. உண்மையாகவே நீட் தேர்வுக்குஎதிராக தி.மு.க., இருக்கிறது என்றால், அதன் தோழமை கட்சியான காங்கிரசிடம் சொல்லி, அப்போதே நளினியை தடுத்து இருக்கலாமே; ஏன் செய்யவில்லை?இப்போது நீட் தாக்கம் குறித்து அறிவதற்காக குழு அமைத்து, அறிக்கை வாங்கிஉள்ளனர்; அதனால் என்ன பலன்? இவர்களே நீட் தேர்வை அறிமுகப்படுத்தி, அது கட்டாயம் வேண்டும் என நீதிமன்றத்தில் வாதாடி, பின் ரத்து செய்ய வேண்டும் என போராடி, காரணம் கண்டறிய குழு அமைத்து... எவ்வளவு காமெடி களேபரங்கள் செய்கின்றனர்! இவர்களின் அரசியல் காரணங்களுக்காக, மக்களின் வரிப்பணம் அல்லவா விரயமாகிறது.நீட் தேர்வால் மாணவர்களுக்கு பாதிப்பு உண்டா என ஆராய குழு அமைத்த தி.மு.க., அரசு, &'டாஸ்மாக்&' கடையால் ஏற்படும் தாக்கம் குறித்து அறிந்து கொள்ள குழு அமைக்க முன்வருமா? இந்த குழு அமைக்காமல் இருந்தால், மாணவர்கள் குழப்பம் அடையாமல் நீட் தேர்விற்கு தயாராகி இருப்பர். இப்போது மாணவர்கள் குழப்பமான மனநிலையுடன் இருப்பர். மாணவர்களின் வாழ்வோடு விளையாடுகிறது தி.மு.க., அரசு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்