உள்ளூர் செய்திகள்

நர்சிங் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பம்

தமிழகத்தில், 2023-2024ம் கல்வி ஆண்டிற்கான மருத்துவம் சார்ந்த பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., உள்ளிட்ட துணை மருத்துவ பட்டப் படிப்புகளில் சேர www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்கள் வாயிலாக இன்று காலை 10:00 மணி முதல் விண்ணப்பிக்கலாம். துணை மருத்துவ படிப்புகள் குறித்த தகவல் தொகுப்பேடு மற்றும் விண்ணப்பிக்க வேண்டிய தகவல்கள் குறித்த விபரங்கள் இந்த இணையதளங்களில் உள்ளன. வரும் 28ம் தேதி மாலை 5:00மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.பொதுவாக எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கான கலந்தாய்வு முடிந்தபின் தான் மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளுக்கு கலந்தாய்வு துவங்குவது வழக்கம். இந்தாண்டு மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்ப பதிவு துவங்கும் முன் மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு துவங்கி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்