குடிநீர் சிக்கனம் ஓவியங்கள் வரைந்து விழிப்புணர்வு
பெரும்பாக்கம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு வளாகத்தில், ஐந்து அரசு பள்ளிகள் உள்ளன. இதில் சில பள்ளிகளில், தனியார் நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் வாயிலாக பல்வேறு உதவிகள் செய்யப்படுகின்றன. தனியார் நிறுவனம் ஒன்று, மேல்நிலைப்பள்ளி கட்டடம் மற்றும் சுற்றுச்சுவரை கட்டிக் கொடுத்தது. இரு இடங்களில், குடிநீர் தொட்டியும் கட்டப்பட்டு உள்ளது.இந்த தொட்டியில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துவது எப்படி, எப்போதெல்லாம் கை கழுவ வேண்டும் என, விளக்க படத்துடன் விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டுள்ளது. மண்ணில் விளையாடிய பின், செல்லப் பிராணிகளை கொஞ்சிய பின், கழிப்பறையை உபயோகித்த பின், சாப்பிடும் முன், இருமல், தும்மலுக்கு பின், கை கழுவ வேண்டும் என ஓவியத்தால் விளக்கப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக சுகாதாரமாக இருப்பதுடன் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும் எண்ணத்தை பள்ளி பருவத்திலேயே விதைக்க முடியும் என ஆசிரியர்கள் கூறினர்.