உள்ளூர் செய்திகள்

சாஸ்த்ரா- பிங்காம்டன் பல்கலைகள் ஒப்பந்தம்

தஞ்சாவூரில் உள்ள சாஸ்த்ரா பல்கலை அமெரிக்காவில் உள்ள பிங்காம்டன் பல்கலையுடன் மாணவர்களின் படிப்புக்கான பரிமாற்றத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நேற்று முன்தினம் கையெழுத்திட்டுள்ளது. பிங்காம்டன் பல்கலை சார்பில் அதன் தலைவர் ஹார்வி ஸ்டென்ஜர் சாஸ்த்ரா பல்கலை துணைவேந்தர் வைத்திலிங்கம் ஆகியோர் இதில் கையெழுத்திட்டனர். இதன்படி 2023 - 2024ம் ஆண்டுக்கான இளங்கலை முதுகலை முனைவர் பட்ட படிப்புகளுக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை இரு பல்கலைகளும் பரிமாறிக் கொள்ளும்.இதில் பிங்காம்டன் பல்கலையின் வாயிலாக 2 + 2 ஆண்டு இளங்கலை படிப்பும் இரு பல்கலைகளும் இணைந்து 3.5 + 1.5 ஆண்டு இளங்கலை மற்றும் முதுகலை படிப்பும் வழங்கப்படும். மேலும் ஆசிரியர்களுக்கான கல்வி விடுப்புடன் பி.எச்டி. பட்டமும் கிடைக்கும். இந்த நிகழ்வில் இன்ஜினியரிங் டீன் கிருஷ்ணசாமி ஸ்ரீஹரி திட்டமிடல் துறை தலைவர் மதுசூதன் கோவிந்தராஜு ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்