சர்வதேச கராத்தேவில் ஈரோடு மாணவர் அசத்தல்
பெருந்துறை: இந்தியா, இலங்கை, நேபாளம், பூடான், பங்களாதேஷ் உள்ளிட்ட ஏழு நாடுகள் பங்கேற்ற, சர்வதேச கராத்தே போட்டி புதுடெல்லியில் நடந்தது. இதில் பெருந்துறை, சுண்டக்காம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி மூன்றாம் வகுப்பு மாணவன் பரணி, கட்டா பிரிவில் கலந்து கொண்டு, வெண்கல பதக்கம் வென்றார். மாணவன், பயிற்சியாளர் பரமேஸ்வரனுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் காளியப்பன், பள்ளியின் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், ஆசிரியர்கள் பாராட்டினர். இதேபோல் ஈரோடு, ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையத்தின் எட்டாம் வகுப்பு மாணவி காசி விசாலாட்சி, கட்டே பிரிவில் தங்கம், சண்டை பிரிவில் வெண்கல பதக்கம் வென்றார்.