வெளிநாடுகளில் மருத்துவம்: பதிவு செய்து பணிபுரியலாம்
நீட் தேர்வு மதிப்பெண் வெளியாகியுள்ளதால் பல மாணவர்கள் குறைந்த செலவில் மருத்துவ கல்வி தரும் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள கல்லுாரிகளுக்கு விண்ணப்பிக்க தொடங்கியுள்ளனர். இந்திய தேசிய மருத்துவ ஆணையம், வெளிநாடுகளில் படிக்கும் நம் மாணவர்கள், அங்கு மருத்துவ பட்டம் பெற்ற பின், தாங்கள் படித்த நாட்டின் அரசு அமைப்பிடம் பதிவு செய்து அந்நாட்டில் மருத்துவர்களாக பணிபுரிய உரிமம் பெற்றிருந்தால் மட்டுமே, இந்தியாவில் மருத்துவர்களாக பதிவு செய்திடலாம் என அறிவித்துள்ளது.இதனால் பிலிப்பைன்ஸில் அப்படி பதிய முடியுமா என மாணவர்கள், பெற்றோர்கள், அந்த அரசிடம் விளக்கம் கேட்டு மின்னஞ்சல்களை அனுப்பினர். இதற்கு பதிலளிக்கும்படி கடந்த 21ல் திறமைசார் தொழில்களை வரையறை செய்திடும், புரபஷனல் ரெகுலேஷன் கமிஷன் தலைவர் சாரிடோ ஸமோரா ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.அதில், பிலிப்பைன்ஸ் மருத்துவ சட்டப்படி இயங்கி வரும் மருத்துவ கல்லுாரிகளில் படித்து முடித்த இந்திய மருத்துவர்கள், அதற்கு விண்ணப்பித்து, உரிமம் பெற்று மருத்துவராக பிலிப்பைன்ஸ் அரசிடம் பதிந்து கொள்ளலாம் என கூறியுள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டின் மருத்துவ கல்லுாரிகளில் படிக்க விரும்புவோர், நீட் தேர்வில் குறைந்தது, 107 மதிப்பெண்கள், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதல் தகவல்களை, பிலிப்பைன்ஸ் தவோ மருத்துவ கல்லுாரியின், இந்திய பிரதிநிதியாக சென்னையில் இயங்கும் லிம்ரா ஓவர்சீஸ் எஜூகேஷன் நிறுவனத்தை நேரிலோ, 9445783333, 9445483333, 9952922333 என்ற எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.