காந்திகிராம பல்கலை.,யில் முன்னாள் மாணவர் ’சங்கமம்’
திண்டுக்கல்: காந்திகிராம பல்கலை.,யில் கூட்டுறவு துறையில் படித்த, முன்னாள் மாணவர்களுக்கான ‘சங்கமம்’ நடந்தது. காந்திகிராம பல்கலை.,யில் 1992 ஆண்டுமுதல் 95 வரை, கூட்டுறவு துறையில் படித்து பட்டம் பெற்ற முன்னாள் மாணவர்களுக்கான ‘சங்கமம்’ நிகழ்ச்சி நடந்தது. மூன்று பெண்கள் உள்பட 30 முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர். ஓய்வு பெற்ற கூட்டுறவுதுறை தலைவர் ஜோசப் தலைமை வகித்தார். துறை தலைவர் சுப்புராஜ் முன்னிலை வகித்தார். முன்னாள் மாணவர்களில் ஒருவர் வக்கீலாகவும், இரண்டு பேர் போலீஸ் துறையிலும், இரண்டு பேர் அரசுதுறையிலும், நான்கு பேர் நூலக அலுவலர்களாகவும், இரண்டு பேர் கூட்டுறவு துறையிலும் பணியாற்றி வருகின்றனர். முன்னதாக படிப்பு காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்த கருத்துப் பறிமாற்றம் நடந்தது. தற்போதைய கூட்டுறவுத்துறை மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், முதல் மற்றும் இரண்டாவது பருவ தேர்வுகளில், முதல் மதிப்பெண் பெறுபவர்க்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக அறிவித்தனர். பேராசிரியர் நாராயணசாமி, டாக்டர் தமிழ் மணி, முன்னாள் மாணவர்களின் குடும்பத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.