மாலை நேர பொறியியல் கல்லுாரி மூடல்
பெங்களூரு: பெங்களூரின் ஒரே ஒரு மாலை பொறியியல் கல்லுாரி மூடியதால் மாணவர்கள் பாதிப்படைந்துள்ளனர்.பெங்களூரின் பசவனகுடியில் பி.எம்.எஸ்., என்ற மாலை நேர பொறியியல் கல்லுாரி செயல்பட்டது. பெங்களூரில் உள்ள ஒரே ஒரு மாலை கல்லுாரி இதுவாகும். இது மாணவர்களுக்கு, மிகவும் உதவியாக இருந்தது. காலையில் பணிக்கு சென்று, மாலையில் கல்லுாரிக்கு சென்று படித்து வந்தனர்.ஆனால், 2023 - 24ம் கல்வி ஆண்டில், கல்லுாரியை நடத்த வேண்டாம் என, ஏ.ஐ.சி.டி.இ., எனும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி இயக்கம் உத்தரவிட்டுள்ளது. பெங்களூரின் ஒரே ஒரு மாலை பொறியியல் கல்லுாரி மூடியதால் மாணவர்கள் பாதிப்படைந்துள்ளனர்.கல்லுாரி முதல்வர் முரளீதர் கூறியதாவது:பொறியியல் கல்லுாரி செயல்பட, அனுமதி அளிக்கும்படி, மாநில அரசிடம் நாங்கள் வேண்டுகோள் விடுத்தோம். ஆனால் ஏ.ஐ.சி.டி.இ., உத்தரவு அடிப்படையில், அரசு அனுமதி மறுத்துள்ளது. எனவே நடப்பாண்டு மாலை கல்லுாரியை மூடியுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.