அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு கவுரவம்
சேலம்: இந்தியாவின் சிறந்த, 100 உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றாகவும், இந்தியாவில் ஒரே ஒரு, அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையாகவும், விநாயகா மிஷன் பல்கலைக்குட்பட்ட சேலம் விம்ஸ் மருத்துவமனை வளாகம் புதுச்சேரி அறுபடை வீடு தொழில்நுட்ப கல்லுாரி வளாகம் ஆகியவற்றில் உள்ள, அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து துறை டீன் செந்தில்குமார் கூறியதாவது:ஜியு., லண்டன் தர வரிசை, உலக அளவில் கல்வி நிறுவன செயல்பாடுகளை ஆராய்ந்து, தரவரிசையை அளித்து வருகிறது. சமீபத்திய ஜியு., இந்திய தரவரிசையில், எங்கள் கல்லுாரி கல்வித்தரம், ஆராய்ச்சி வெளியீடு, ஆசிரியர் தரம், உட்கட்டமைப்பு, மாணவர்களின் நலன் சார்ந்த நடவடிக்கை, வேலைவாய்ப்பு போன்ற அனைத்து தரவுகளையும் மதிப்பீடு செய்து அதன்படி தரவரிசை அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இத்தரவரிசை பட்டியலில் இடம் பெற்ற ஒரே அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை எங்களுடையது. இவ்வாறு அவர் கூறினார்.இந்த அங்கீகாரம் கிடைக்க, சிறப்பாக செயலாற்றி வரும் துறையின் டீனை, பல்கலை வேந்தர் கணேசன், இயக்குனர் அனுராதா, துறை பேராசிரியர்கள் பாராட்டினர்.