உள்ளூர் செய்திகள்

சென்னை பல்கலை துணைவேந்தர் நியமனம் எப்போது?

சென்னை: சென்னை பல்கலை துணைவேந்தரின் பதவிக்காலம் நேற்றுடன் முடிந்தது. புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய, இன்னும் கமிட்டி அமைக்கப்படவில்லை.சென்னை பல்கலையின் துணைவேந்தராக, அண்ணா பல்கலையின் பேராசிரியர் கவுரி, மூன்று ஆண்டுகளுக்கு முன் நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் நேற்றுடன் முடிந்தது. பல்கலை துணைவேந்தரின் பதவிக்காலம் முடிவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே, தேடல் குழு அமைக்க வேண்டும் என, தமிழக அரசு ஏற்கனவே அரசாணை பிறப்பித்து உள்ளது.ஆனால், சென்னை பல்கலை துணைவேந்தர் பதவிக்காலம் நிறைவடைந்தும், தமிழக அரசு இன்னும் தேடல் குழு அமைக்கவில்லை. நிர்வாகப் பணிகளை மேற்கொள்வதற்கான தற்காலிக நிர்வாக கமிட்டி அமைப்பதும் தாமதமாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்