உள்ளூர் செய்திகள்

சென்னை பல்கலைக்கு நாக் சான்றிதழ் கிடைத்தது

சென்னை பல்கலைக்கு, மத்திய அரசின், தேசிய அங்கீகார மற்றும் மதிப்பீட்டு குழுவான, நாக் தகுதிக்கான, ஏ கிரேடு சான்றிதழ், 2014ல் பெறப்பட்டது. இந்த சான்றிதழ், 2019ம் ஆண்டுடன் காலாவதியாகி விட்டது. அதன்பின், பல்வேறு வகை முயற்சிகள் மேற்கொண்ட பிறகும், நாக் அங்கீகாரம் பெறப்படவில்லை. இந்நிலையில், நாக் கமிட்டிக்கு சென்னை பல்கலை முறையாக விண்ணப்பித்து, தங்கள் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தின. இதையடுத்து, பெங்களூரில் இருந்து நாக் குழுவினர், கடந்த இரு வாரங்களுக்கு முன், சென்னை பல்கலையில், நேரடி ஆய்வு நடத்தி வருகின்றனர்.சென்னை பல்கலையின் துணைவேந்தராக இருந்து, 20ம் தேதி ஓய்வு பெற்ற பேராசிரியர் கவுரி ஆகியோர் தலைமையிலான பேராசிரியர் குழு, நாக் கமிட்டிக்கு உள்கட்டமைப்புகளை நேரில் சுற்றி காட்டியது. கடந்த, ஒன்பது ஆண்டுகளாக எந்த நிகழ்ச்சியும் நடத்தாமல் இருந்த, பாரம்பரியம் மிக்க செனட் அரங்கில், நாக் கமிட்டியினர் பார்க்க, மாணவ - மாணவியரின் நாட்டிய நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிலையில், சென்னை பல்கலைக்கு நாக் அந்தஸ்து சான்றிதழ் நேற்று வழங்கப்பட்டுள்ளது. நாக் அந்தஸ்தில் முதல் தரமான ஏ பிளஸ் பிளஸ் சென்னை பல்கலைக்கு கிடைத்துள்ளது. சி.ஜி.பி.ஏ., எனப்படும், தரமதிப்பீட்டில், மொத்தம் ஏழு கிரேடுக்கு, 3.59 கிடைத்துள்ளது. 3.51க்கு அதிகமாக கிரேடு பெறும் நிறுவனங்களுக்கு, இந்த முதல் தரம் வழங்கப்படுகிறது.ஏழு அம்ச மதிப்பெண்களில், உள்கட்டமைப்புக்கு அதிகபட்சமாக, 3.85 கிடைத்துள்ளது. பாடத்திட்டம், 3.8; கற்றல், கற்பித்தல், மதிப்பீடு, 3.67; ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்பு, 3.48; நிர்வாகம், தலைமை, மேலாண்மை, 3.4; பல்கலையின் மதிப்பு, 3.57 கிரேடு மதிப்பெண் கிடைத்துள்ளது. குறைந்தபட்சமாக, மாணவர்களின் ஒத்துழைப்பு மற்றும் முன்னேற்றத்துக்கு, 3.38 கிடைத்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்