உள்ளூர் செய்திகள்

பள்ளி கட்டட பணிகளுக்கு அமைச்சர் அடிக்கல்

ஒட்டன்சத்திரம் கே.ஆர்.அரசு மேல்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தில் ரூ.2.6 கோடி மதிப்பீட்டில் 12 வகுப்பறை கொண்ட கட்டடங்கள், தனியார் பங்களிப்புடன் 36 வகுப்பறைகள் கொண்ட கட்டடங்கள், பரப்பலாறு அரசு மேல்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் 14 வகுப்பறைகள் கொண்ட வகுப்பறை கட்டடம் உட்பட ரூ.14.15 கோடி மதிப்பிலான கட்டுமான பணிகளை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்.மேலும் ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் முடிவற்ற திட்ட பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். தொடர்ந்து அம்பிளிக்கை ஜேக்கப் நினைவு கிறிஸ்தவ கல்லுாரியில் நடந்த விழாவில் பெரிய கோட்டை, ஓடைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிகள், அம்பிளிக்கை சாந்தி நிகேதன் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 120 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.கள்ளிமந்தையம் திருப்பதி அருள் நெறி மேல்நிலைப் பள்ளியில் குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, பழநி ஆர்.டி.ஓ., சரவணன், மாவட்ட கல்வி அலுவலர் பரிமளா, தாசில்தார் முத்துச்சாமி, ஒட்டன்சத்திரம் நகராட்சி தலைவர் திருமலைசாமி, துணைத்தலைவர் வெள்ளைச்சாமி, நகராட்சி கமிஷனர் மீனா, மாவட்ட திட்டக் குழு உறுப்பினர் கண்ணன், வட்ட வழங்கல் அலுவலர் பிரசன்னா கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்