எஸ்.ஐ., வேலை: அடுத்த மாதம் ரிசல்ட்
போலீஸ் எஸ்.ஐ., பணிக்கான எழுத்து தேர்வு முடிவு, செப்., மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.காவல் துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு, எஸ்.ஐ.,க்கள் மற்றும் நிலைய அதிகாரிகள் பணியிடங்களுக்கு, 750 பேரை தேர்வு செய்ய, சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. விண்ணப்பத்தாரர்கள், 1.86 லட்சம் பேருக்கு, இரு தினங்களாக எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள், செப்., மாதம் வெளியிடப்படும் என, வாரியம் நேற்று அறிவித்துள்ளது.