மருத்துவக் கல்லுாரி அங்கீகார கடிதம் போலி
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்துாரில் உள்ள மீனாட்சி மருத்துவக் கல்லுாரிக்கு தேசிய மருத்துவ ஆணையம், இந்த ஆண்டுக்கான அங்கீகாரம் வழங்கவில்லை. இதனால், 250 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கான மாணவர் சேர்க்கை பாதிக்கப்பட்டது.அந்த கல்லுாரி நிகர்நிலை பல்கலை அந்தஸ்தில் இருப்பதால், அதில் உள்ள, 100 சதவீத இடங்களையும் மத்திய மருத்துவ கவுன்சிலிங் குழுவே நிரப்பி வந்தது. இந்நிலையில், மீனாட்சி மருத்துவக் கல்லுாரிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதாக, மத்திய மருத்துவ கவுன்சிலிங் குழு கடிதம் அனுப்பியதாக தகவல் வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள தேசிய மருத்துவ ஆணையம், காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவ கல்லுாரியில் மாணவர் சேர்க்கைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதாக அனுப்பப்பட்ட கடிதம் போலியானது. அவற்றை யாரும் நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளது.