உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளிகளில் சிலம்பம் கட்டாயமாக்க வலியுறுத்தல்

சென்னை: விளையாட்டுப் பிரிவுக்கு அளிக்கப்படும், 3 சதவீத இட ஒதுக்கீட்டை, 5 சதவீதமாக உயர்த்த வேண்டும்; அரசு பள்ளிகளில் சிலம்பத்தை கட்டாயமாக்க வேண்டும்&' என, சர்வதேச சிலம்ப போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.மலேஷியா நாட்டில், நான்காவது சர்வதேச சிலம்பம் விளையாட்டு போட்டிகள் நடந்தன. அதில், இந்தியா, மலேஷியா, சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேஷியா உட்பட, 14 நாடுகளை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து, 19 மாணவ - மாணவியர் பங்கேற்றனர். அவர்கள், 19, தங்கம், 18 வெள்ளி மற்றும், 17 வெண்கல பதக்கங்கள் பெற்று, ஒட்டு மொத்தத்தில் இரண்டாம் இடம் பெற்று, நேற்று காலை சென்னை திரும்பினர். விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.மாணவ - மாணவியர் அளித்த பேட்டி:விளையாட்டுப் பிரிவுக்கு, 3 சதவீத இட ஒதுக்கீட்டை, தமிழக அரசு தற்போது அளிக்கிறது. இதை, 5 சதவீதமாக உயர்த்த வேண்டும். சிலம்பம் வெளிநாட்டில் இருந்து வந்த விளையாட்டு அல்ல. நம் இந்திய விளையாட்டு. அதிலும், தமிழக கிராம பகுதிகளில் உள்ள பாரம்பரிய விளையாட்டு. அதை மேலும் ஊக்குவிக்க, அரசு பள்ளிகளில் சிலம்பம் விளையாட்டை கட்டாயமாக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்