உள்ளூர் செய்திகள்

திண்டுக்கல் ஆசிரியருக்கு தேசிய நல்லாசிரியர் விருது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலைய உதவி பயிற்சி அலுவலர் சித்திரகுமாருக்கு, தேசிய நல்லாசிரியர் விருதை ஜனாநிதிபதி திரவுபதி முர்மு வழங்கினார். திண்டுக்கல் அரசு மகளிர் தொழிற் பயிற்சி நிலையத்தில் டி.டி.பி-.ஓ., தொழில் பிரிவில் திருச்சியைச் சேர்ந்த ச.சித்திரக்குமார் உதவி பயிற்சி அலுவலராக பணிபுரிந்து வருகிறார். 23 ஆண்டுகளுக்கு முன்பு இளநிலை பயிற்சி அலுவலராக பணியில் சேர்ந்த இவர், 2010 ல் உதவி பயிற்சி அலுவலராக பதவி உயர்வுப் பெற்றார். டி.டி.பி.ஓ., தொழில் பிரிவுக்கு பாடத் திட்டம் தயாரிக்கும் குழுவில் 2012 முதல் இடம் பெற்ற இவர், தொழிற் பயிற்சி நிலையத் தேர்வுக்கான வினாத் தாள் தயாரிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு டில்லியில் நடைபெற்ற விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சேதிய நல்லாசிரியர் விருதை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்