பாரதியார் பல்கலை ஆசிரியர் சங்க தேர்தல்
கோவை: பாரதியார் பல்கலை ஆசிரியர் சங்க தேர்தல், நேற்று பல்கலை அரங்கில் நடந்தது. காலை 11:00 மணிக்கு துவங்கி மதியம் 2:00 மணி வரை ஓட்டு பதிவு பணிகள் நடந்தன.இத்தேர்தலில், 161 உறுப்பினர்களில் 157 பேர் ஓட்டுக்களை பதிவு செய்தனர். நேற்று 3:00 மணியளவில் ஓட்டுகள் எண்ணி, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன் படி, தாவரவியல் துறை பேராசிரியர் வசந்த் தலைவராகவும், கணினி பயன்பாட்டியல் துறை பேராசிரியர் அமுதா துணைத்தலைவராகவும், உமாதேவி செயலாளராகவும், கிரிஜா துணைச் செயலாளராகவும், புவனேஸ்வரி பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.தேர்தல் அலுவலராக தாவரவியல் துறைத்தலைவர் பரிமேலழகன், தேர்தல் பார்வையாளராக துணை பதிவாளர் செல்வராசு செயல்பட்டு, தேர்தலை நடத்தி முடிவுகளை அறிவித்தனர். வெற்றி பெற்றவர்களை, துணைவேந்தர் பொறுப்பு குழு உறுப்பினர்கள், பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.