உள்ளூர் செய்திகள்

உலக விளையாட்டரங்கில் தமிழ் மண் மணம்!

திருப்பூர்: வரும் 24ம் தேதி நாட்டு நலப்பணி தினம் கடைபிடிக்கப்படுகிறது.இதனை முன்னிட்டு, திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி என்.எஸ்.எஸ்., அலகு - 2 சார்பில், மாணவ, மாணவியருக்கு, கபடி, இறகுப்பந்து, வாலிபால், செஸ், கேரம் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.துவக்க நிகழ்ச்சிக்கு கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன், தலைமை வகித்தார். என்.எஸ்.எஸ்., அலகு-2 திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார், முன்னிலை வகித்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசியதாவது:தமிழ் மண்ணில், தமிழர்களால் உருவாக்கப்பட்ட பல விளையாட்டுகள், தற்போது உலக நாடுகளில் பரவலாக விளையாடப்படுகிறது. கை-பிடி என்ற விளையாட்டு தான் கபடி, சடுகுடு என பல பெயர்களில் அழைக்கப் படுகிறது.மாணவர்கள் சமூக வலைதளங்களில் மூழ்கி, நேரத்தை வீணடிப்பதை தவிர்த்து, தங்களுக்கு பிடித்தமான விளையாட்டுகளில் நேரத்தை செலவிட வேண்டும். புதிய விளையாட்டுக்களை கற்றுக்கொள்ள வேண்டும். விளையாட்டின் வாயிலாக மனம் ஒருங்கிணையும்; கவனச்சிதறல் ஏற்படாது; தவறான பாதைக்கு செல்லும் மனநிலை மாறும். இவ்வாறு, அவர் பேசினார்.விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், பரிசு ஆகியவை, வரும், 24ம் தேதி வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்