இந்திய கல்விமுறை பழமையானதாக உள்ளது !
தேவையான சிறுசிறு மாற்றங் களை, உயர் கல்வியில் நாம் செய்யத் தவறி விட் டோம். இது, இந்தியாவின் உயர் கல்விக்கு ஒரு சாபக் கேடான விஷயம் என சென்னைப் பல்கலைக் கழக 152வது பட்டமளிப்பு விழாவில், தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் தலைவர் குழந்தைசாமி பேசினார்.சென்னைப் பல்கலைக் கழகத்தின் 152வது பட்டமளிப்பு விழா, பல்லைக் கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடந்தது. தமிழக கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா தலைமை வகித்தார்.பட்டமளிப்பு விழாவில், தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் தலைவர் குழந்தைசாமி பேசியதாவது: இந்தியாவில், 415 பல்கலைக் கழங்கள், 22 ஆயிரத்து 64 கல்லூரிகள், 5.22 லட்சம் ஆசிரியர்கள், ஒரு கோடியே 38 லட்சம் மாணவர்கள் உள்ளனர். அமெரிக்கா, சீனாவின் உயர் கல்விக்கு அடுத்து, உலகில் மிக அதிகமான எண்ணிக்கையை இந்தியா கொண்டுள்ளது.உயர்கல்வியில் இந்தியாவில் ஆய்வுக்கு ஒதுக்கப்படும் தொகை குறைவாக இருப்பது, நிதி பற்றாக் குறையால் இல்லை. நிதி கேட்பதற்கு போதுமான ஆய்வுத் திட்டங்கள் உயர் கல்வித்துறையில் இல்லாததே இதற்கு காரணம்.உலகமெங்கும் உயர்க் கல்வித்துறையில் உள்ள நடைமுறைகளை பின்பற் றாமல், இந்தியா தனித்து நிற்கிறது. கால ஓட்டத்தில் தேவையான சிறுசிறு மாற்றங்களை, உயர் கல்வியில் நாம் செய்யத் தவறி விட்டோம். இது, இந்தியாவின் உயர் கல்விக்கு ஒரு சாபக்கேடான விஷயம்.இன்றைய பணியை இன்றைய கருவி கொண்டு தான் செய்ய வேண்டும். இன்றைய பணியை நேற்றைய கருவி கொண்டு செய்தால், நாளைய பணிக்கு நாம் பொருத்தமற்றவர்களாக ஆகி விடுவோம். உயர்கல்வித் துறையில் அதிக எண்ணிக்கையிலான பல்கலைக் கழங்களை உருவாக்குவதே, இன்றைய கருவி ஆகும்.இவ்வாறு குழந்தைசாமி பேசினார்.சென்னைப் பல்கலைக் கழக துணைவேந்தர் திருவாசகம் பேசியதாவது:டாக்டர் பட்டம் பெறுவதற்கான ஆய்வுகளுக்கு, மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டு முறை, இந்தியாவிலேயே இங்கு தான் முதலில் நடைமுறைக்கு வந்துள்ளது. வறுமையின் முன், திறமை பாதிக்கப்படக் கூடாது; இதற்காக, பல்கலைக் கழகத்தில் இலவச கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இலங்கையில் உள்ள தமிழர்களுக்கும், தமிழகத் தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கும், தொலைதூரக் கல்வித் திட்டத்தின் மூலம், இலவச கல்வி அளிக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இதற்கான திட்ட அனுமதியை தமிழக அரசு, இலங்கை அரசு ஆகியவற்றிடம் இருந்து பெற உள்ளோம்.இது குறித்து, சென்னையில் உள்ள இலங்கைத் துணை தூதரிடமும் கலந்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.சென்னைப் பல்கலைக் கழகத்தின் 152வது பட்டமளிப்பு விழாவில், மொத்தம் 596 பேர் நேர்முகமாகவும், 86 ஆயிரத்து 806 பேர் வாராமுகமாகவும் பட்டம் பெறுகின்றனர்.இவ்வாறு துணைவேந்தர் திருவாசகம் பேசினார். டாக்டர் பட்டம்: கோவை குண்டு வெடிப்புக்கு பிறகு, மக்களோடு இணைந்து காவல் பணி ஆற்றிய சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., ராதாகிருஷ்ணனுக்கும், ஆங்கில இலக்கியத்திற்காக தமிழச்சி தங்கபாண்டியனுக்கும், ஓட்டல் மேனேஜ்மென்ட்டிற்காக சமையல் கலை நிபுணர் தாமோதரனுக்கும், தமிழக கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா, டாக்டர் பட்டம் வழங்கினார்.