உள்ளூர் செய்திகள்

வேலுநாச்சியார் இயக்கத்தில் நுால் வெளியீட்டு விழா

புதுச்சேரி: புதுச்சேரி வேலுநாச்சியார் இலக்கிய சமூக இயக்கம் சார்பில் கவியரங்கம், நுால் வெளியீடு விழா ராமகிருஷ்ணா உயர்நிலைப்பள்ளியில் நடந்தது.ராமலிங்கம் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, கம்பனின் கற்பகத் தமிழ் எனும் நுாலை வெளியிட்டார். காஞ்சிமாமுனிவர் அரசு பட்ட மேற்படிப்பு நிறுவன இயக்குனர் செல்வராஜ், திருக்குறள் மன்றத் துணைத் தலைவர் சந்திரசேகரன் ஆகியோர் நூலைப் பெற்றுக் கொண்டனர்.ராமகிருஷ்ணா மடத்தின் துறவி ஸ்ரீமத் சுவாமி ஆத்மகனானந்தா முன்னிலை வகித்தார். புதுச்சேரி தமிழ் சங்க பொருளாளர் அருள்செல்வம் சிறப்புரையாற்றினார். கலை பண்பாட்டுத் துறை இயக்குனர் கலியபெருமாள் பாராட்டுரை வழங்கி, கவிதை வாசித்த கவிஞர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.இயக்கத்தின் நிறுவனத் தலைவர் கலைவரதன் நோக்க உரையாற்றினார். வேலாயுதம், ராஜமாணிக்கம், சரவணன், சசிகுமார், ஆறு செல்வம் வாழ்த்தி பேசினர். பேராசிரியர் கிருஷ்ணா ஏற்புரை வழங்கினார். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்