தையல் தொழில் கடனுதவி விண்ணப்பிக்க அழைப்பு
செங்கல்பட்டு: ஆதிதிராவிடர்கள் தையல் தொழில் துவங்க, கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.இது குறித்து, கலெக்டர் ராகுல்நாத் அறிக்கை:தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் - தாட்கோ வாயிலாக, தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ், தையல் தொழிலுக்கு கடனுதவி பெற, ஆதிதிராவிடர், பழங்குடியினத்தை சார்ந்த தகுதியான பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்.