மோசடி பத்திரிகையாளர்கள் கலெக்டர் கடும் எச்சரிக்கை
ஈரோடு: பத்திரிகையாளர்கள் என்று கூறி, மோசடி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.செய்திக்குறிப்பில் அவர் கூறியிருப்பதாவது:பத்திரிகையாளர் பெயரில் சில நபர்கள், உயர் அலுவலர்களிடம் கூறி, கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக, மக்களிடம் மனுக்களை பெற்று, ஏமாற்றி பணம் பறிப்பதாக புகார் வருகிறது.கலெக்டர் அலுவலகம், அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் சில நபர்கள், போலி பத்திரிகையாளர் அடையாள அட்டையை பயன்படுத்தி, மோசடி செயல்களில் ஈடுபடுவது தெரிய வந்துள்ளது. பத்திரிகையாளர் பெயரில் சிபாரிசு செய்யும் நபர்கள் குறித்து, அரசு அலுவலர்கள் எனக்கு தகவல் தெரிவிக்கலாம். 94980-42428 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு ஆதாரத்துடன் குறுந்தகவல் அனுப்பினால், அந்நபர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.