உள்ளூர் செய்திகள்

ஊக்கத்தொகை நிபந்தனைகளால் அரசு ஊழியர்கள் அதிருப்தி

சென்னை: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், தங்கள் பணி காலத்தில் கூடுதல் கல்வித்தகுதி பெற்றால், ஒரு முறை மட்டும் ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு இருப்பது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே, கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், அவர்கள் வகிக்கும் பதவிக்கு தேவையான கல்வியை விட, கூடுதல் கல்வி தகுதியை, பணிக்காலத்தில் பெற்றால், அவர்களுக்கு அரசு சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வந்தது.6 சதவீதம் அதாவது, அவர்களின் அடிப்படை சம்பளத்தில், ஆறு சதவீத உயர்வு வழங்கப்பட்டது. இந்த சம்பள உயர்வு பணிக்காலம் முழுதும் அமலில் இருக்கும். இதனால், மாத சம்பளம் அதிகரிக்கும். அதேபோல, அடிப்படை சம்பளத்தை கணக்கிட்டு வழங்கப்படும் அகவிலைப்படியும் உயர்த்தி வழங்கப்படும். இந்த நடைமுறை, கொரோனா காரணமாக, 2020ல் ரத்து செய்யப்பட்டது.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், பழைய முறைப்படி ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்படும் என, வாக்குறுதி அளிக்கப்பட்டது. தற்போது, தி.மு.க., அரசு, பழைய முறைப்படி ஊக்க ஊதிய உயர்வு வழங்காமல், ஒரு முறை மட்டும் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.அதன்படி, பி.எச்டி., படிப்புக்கு 25 ஆயிரம்; முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் அதற்கு சமமான படிப்புக்கு, 20 ஆயிரம்; இளநிலை பட்டப்படிப்பு மற்றும் பட்டயப் படிப்புக்கு 10 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்க, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்தொகையை பெற, பல்வேறு நிபந்தனைகளையும் அரசு விதித்துள்ளது. இது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் கூறியதாவது:இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணியில் சேர, பத்தாம் வகுப்பு தேர்ச்சி போதும். இப்பணியில் சேர்ந்தவர்கள், பட்டப்படிப்பு படித்தால், அதற்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்; அது, பின்னர் நிறுத்தப்பட்டது.நிறுத்தம்இதேபோல, ஆசிரியர்கள் எம்.பில்., - பி.எச்டி., போன்ற படிப்புகளை முடித்தால், ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. நாளடைவில் அரசு பணியில் இருப்போர், அவர்கள் பணிக்கு உதவும் வகையிலான மேற்படிப்பை முடித்தால், ஊதிய உயர்வு வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.உயர் கல்வி தகுதிக்காக வழங்கப்படும் ஊதிய உயர்வு, மாதாமாதம் வழங்கப்படும். கடந்த, 2020ம் ஆண்டு இத்தொகை நிறுத்தப்பட்டது. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், பழைய முறைப்படி ஊக்கத்தொகை வழங்குவதாக அறிவித்தது.பெற முடியாத நிலைஆனால், தற்போது ஒரு முறை மட்டும் ஊக்கத் தொகை வழங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதை பெறவும் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி யாரும் அத்தொகையை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நிபந்தனைகளை கைவிட்டு, ஏற்கனவே நடைமுறையில் இருந்தபடி, உயர் கல்வி தகுதிக்கு உரிய ஊக்கத்தொகை வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.என்னென்ன?*கல்விசார் அல்லது இலக்கியம் சார்ந்த பாடப்பிரிவுகளில் பெறப்படும், உயர் கல்வித் தகுதிக்கு ஊக்கத் தொகை வழங்கப்படாது*பணிக்கு தேவையான கல்வித் தகுதியாக இருக்க வேண்டும்*அனைத்து பதவி நிலையில் உள்ளவர்களுக்கும், இத்தொகை ஒரே மாதிரியாக இருக்கும்*அரசு உதவியுடனோ, கல்விக்காக விடுப்பு எடுத்தோ, கூடுதல் தகுதி பெற்றால் ஊக்கத் தொகை கிடையாது*பல்கலை மானியக்குழு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலால் அங்கீகரிக்கப்படும் கல்வி தகுதிகளுக்கு மட்டுமே, ஊக்கத் தொகை வழங்கப்படும்*ஒருவர் பணிக்காலத்தில் இரண்டு ஊக்கத் தொகை பெற அனுமதி உண்டுl*ஒரு கல்வி தகுதிக்கும், மற்றொரு தகுதிக்கும் இடையில், இரண்டு ஆண்டுகள் இடைவெளி இருக்க வேண்டும்*உயர் கல்வி முடித்த ஆறு மாதங்களுக்குள், ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்க வேண்டும்*ஏற்கனவே துறையால் நிராகரிக்கப்பட்டு இருந்தால், ஊக்கத்தொகை பெற முடியாது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்