காலை உணவு திட்ட மையங்களுக்கு சான்றிதழ்
பண்ருட்டி: அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய பகுதிக ளில் இயங்கிவரும் காலை உணவு திட்ட மையங் களுக்கு உணவுபாதுகாப்பு பதிவு சான்றிதழ் வழங்கப் பட்டது.பண்ருட்டி அடுத்த அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், முதல்வரின் காலை உணவு திட்டத்தில் பணியாற்றும் அமைப்பாளர்கள், சமையலர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை சார்பில் சுகாதாரமான உணவு சமைப்பது, பரிமாறுவது குறித்து செயல் விளக்கம் நடந்தது. அப்போது, காலை உணவு திட்ட 67 மையங்களுக்கு உணவு பாதுகாப்பு பதிவு சான்றிதழ் வழங்கப்பட்டது.உணவு பாதுகாப்பு அலுவலர் ரவிச்சந்திரன் வழங்கினார். இதில் அண்ணாகிராம மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாளர் பூபாலன், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர்.