உள்ளூர் செய்திகள்

மாநில அளவில் மாவட்ட நூலகத்திற்கு விருது

கரூர்: கரூர் கலெக்டர் அலுவலகத்தில், மாநில அளவிலான சிறந்த நுாலகம் விருது பெற்ற கரூர் மாவட்ட நுாலகத்திற்கு பாராட்டு விழா நடந்தது.கலெக்டர் தங்கவேல் தலைமைவகித்தார். மாவட்ட மைய நுாலகம், 2022--23-ம் ஆண்டில், 5,335 நூலக உறுப்பினர்களை சேர்த்ததற்கும், போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்துவது, மாதிரித் தேர்வு நடத்துவது, போட்டித்தேர்வர்களுக்கு குளிர்சாதன வசதியை பெற்றுக்கொடுத்ததற்காகவும், மாநில அளவில் அதிக நுால்களை நன்கொடை பெற்றது ஆகியவற்றிக்காகவும், தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்ககம் சார்பில் மாநில அளவிலான விருது வழங்கப்பட்டது.இனாம் கரூர் கிளை நுாலகத்திற்கு சிறந்த வாசகர் வட்டத்துக்கான நுாலக ஆர்வலர் விருது, பொது நுாலகத்துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக தான்தோன்றிமலை கிளை நுாலகர் சதீஸ்குமாருக்கு விருது வழங்கப்பட்டது.தொடர்ந்து, மாவட்ட மைய நுாலக அலுவலர் சிவக்குமார், நுாலக வாசகர் வட்ட தலைவர் சங்கர் ஆகியோருக்கு கலெக்டர் வாழ்த்து தெரிவித்தார். பொது நுாலக இயக்குநர் இளம்பகவத், பொது நுாலக துணை இயக்குநர் இளங்கோசந்திரகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்