சட்ட கல்லுாரியில் தேசிய சட்ட தினம்
திருவாலங்காடு: திருவள்ளூர் மாவட்டம், பட்டரைப்பெரும்புதுாரில் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லுாரி அமைந்துள்ளது.இங்கு நேற்று தேசிய சட்ட தினம் மற்றும் கேசவானந்த பாரதி வழக்கின், 50 ஆண்டுகால நினைவை கொண்டாடும் விதமான நிகழ்ச்சிக்கு கல்லுாரி முதல்வர் கயல்விழி ஏற்பாடு செய்திருந்தார்.சட்டக்கல்வி இயக்குனர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். விழாவில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு பங்கேற்று சிறப்புரையாற்றினார். இதில் கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட, 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.