உள்ளூர் செய்திகள்

நியூட்ரினோ ஆய்வுக் கூடம்: சந்தேகங்களும், பதில்களும்...

இது குறித்து, பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. இவற்றுக்கு விளக்கம் தருகிறார், சென்னை கணித அறிவியல் மைய இயற்பியல் துறை பேராசிரியர் ஜி.ராஜசேகரன். இந்த அறிவியற் கூடம், மலையில் அமைக்கப்படுவதன் காரணம் என்ன? - ஆர்.சண்முகம், போடி.இந்த ஆராய்ச்சிக்கு ஒரு கி.மீ., பரிமாணமுள்ள பாறை அவசியம். நியூட்ரினோ காணும் கருவி (டிடெக்டர்)யைச் சுற்றிலும் குறைந்தபட்சம் ஒரு கி.மீ., தடிமனுக்கு பாறை இருந்தால் தான் ஆராய்ச்சி நடத்த முடியும். இவ்வளவு பெரிய பாறைகளால் தான், வானவெளியில் இருந்து வரும் காஸ்மிக் கதிர்களை தடுத்து நிறுத்த முடியும். அப்போது தான், டிடெக்டர் மூலம், நியூட் ரினோக்களை காண முடியும். ஐ.என்.ஓ., திட்டத்தால் அப்பகுதியில் உள்ள காடுகள், வயல்கள் பாதிக்கப்படுமா? - டி.கண்ணன், மதுரை.மலைக்குள்ளே வெகு ஆழத்தில் ஆராய்ச்சி கூடம் அமைக்கப்படும். எனவே, மலைக்கு வெளியே உள்ள காடுகளுக்கோ, வயல்களுக்கோ எந்த ஆபத்தும் ஏற்படாது. அங்கு எந்த கதிர்வீச்சு பொருட்களையும் பயன்படுத்தப் போவதில்லை. மலையை தோண்டும் போது உண்டாகும் கற்கள், எங்கு கொட்டப்படும். இவற்றால் சுற்றுப்புறம் பாதிக்கப்படுமா? - எம்.விஜயசாரதி, திண்டுக்கல்.கிரானைட் போன்ற கடினமான பாறைகள் உடைக்கப்படுவதால் கிடைக்கும் கற்களை கட்டடம் கட்ட பயன்படுத்தலாம். இது கழி வுப் பொருள் அல்ல. இதன் ஒரு பகுதி, ஆய்வுக் கூடத்திற்கு செல்லும் சுரங்கப் பாதைக்கு சாலை அமைக்கவும், சுரங்கச் சுவர்கள் கட்டவும், ஆய்வுக் கூடம் கட்டுவதற்கும் பயன்படுத்தப்படும். ஐ.என்.ஓ., திட்டத்தால் சுற்றுப்புற மக்கள் பாதிக்கப்படுவரா? அவர்களுக்கு ஏதாவது நன்மை கிடைக்குமா?- எஸ்.சந்தோஷ், சிவகங்கையாருக்கும் பாதிப்பு ஏற்படாது. உண்மையில் நன்மை கிடைக்கும். ஆய்வுக் கூடம் அமைக்கும்போது நிறைய பேருக்கு வேலை கிடைக்கும். அதன் பிறகு, ஆராய்ச்சிக் கூடத்திலும் வேலை கிடைக்கும். சுற்றுப்பகுதி மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும். அப்பகுதி காடுகளை, விஞ்ஞானிகள் வளப்படுத்துவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்