திருக்குறள் முற்றோதல் போட்டி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
தேனி: திருக்குறளில் உள்ள 1330 குறள்களை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு தமிழ் வளர்ச்சித்துறை ரூ.15ஆயிரம் பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்க உள்ளது.பங்கேற்க விரும்பும் மாணவர்கள் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள திறனறி குழு முன்னிலையில் நேராய்வுக்கு உட்படுத்தப்படுவர். சிறப்பாக செயல்படும் மாணவர்கள் பெயர் தமிழ்வளர்ச்சித்துறை இயக்குனருக்கு பரிந்துரைக்கப்படும்.முற்றோதல் போட்டிக்கான விண்ணப்பங்கள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரிலும் அல்லது தமிழ் வளர்ச்சித்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.கூடுதல் விவரங்களுக்கு 91596 68240 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தமிழ்வளர்ச்சித்துறை அலுவலகத்திற்கு தபால் மூலமாகவோ நேரிலோ டிச., 25க்குள் அனுப்பலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.