உள்ளூர் செய்திகள்

புதுச்சேரி பல்கலை.,யில் பாரதி பிறந்தநாள் விழா

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலையில் சுப்பிரமணிய பாரதி தமிழ் மொழி மற்றும் இலக்கியப் புலத்தில் மகாகவி பாரதியின் 142வது பிறந்தநாள் விழாவை பாரத மொழி திருவிழாவாக மூன்று நாட்கள் கொண்டாடப்பட்டது.தமிழியற்புலம் சார்பில் தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பேச்சு போட்டிகள், பாரம்பரிய கலைகள் மற்றும் கைவினைப் பொருட்களின் கண்காட்சி, பாரம்பரிய உணவுகளை நெருப்பில்லாமல் சமைக்கும் போட்டிகள், தாய்மொழியில் கையெழுத்திடும் பரப்புரை, இந்திய மொழிக் குறும்படங்களைத் திரையிடல் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. தமிழியற் புலத்தின் டீன் நளினிதம்பி நோக்கவுரையாற்றினார்.பல்கலையின் கலை மற்றும் கலாசார உறவுகள் துறை இயக்குனர் லுார்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி, சிறப்புரை ஆற்றினார். இந்தியக் கலாசாரத்தின் பன்முகத்தன்மை மற்றும் அதன் ஒற்றுமையின் வலிமை குறித்து கலந்துரையாடினார்.தொடர்ந்து, பல்கலை மாணவர்களின் பல்வேறு மாநில நடனங்கள், தற்காப்பு கலைகள் மற்றும் பன்மொழிப் பாடல்கள் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்ச்சியில் பேராசியர் கருணாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை உதவிப் பேராசிரியர் லட்சுமிதத் ஒருங்கிணைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்