முதுநிலை மருத்துவ சேர்க்கை கல்லுாரிகளுக்கு கிடுக்கிப்பிடி
சென்னை: மருத்துவ கல்லுாரிகள், முதுநிலை மருத்துவ படிப்புக்கான மாணவர்களை நேரடியாக சேர்க்கக்கூடாது; தேசிய, மாநில அளவிலான ஆன்லைன் கவுன்சிலிங் வாயிலாக மட்டுமே சேர்க்க வேண்டும். அதேநேரத்தில், கட்டண விபரங்களை மாணவர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கலாம் என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்து உள்ளது.முதுநிலை மருத்துவ படிப்பு தொடர்பாக, தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள் விபரம்:*தேசிய மற்றும் மாநில அளவில் நடைபெறும், அனைத்து முதுநிலை, சிறப்பு மருத்துவ மாணவர் சேர்க்கையை, ஆன்லைன் முறையில் மட்டுமே நடத்த வேண்டும்.*கல்லுாரிகள் நேரடியாக மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது. சேர்க்கையில் வெளிப் படைத்தன்மை அவசியம்*நீட் தேர்வு தகுதி அடிப்படையிலும், அனுமதிக்கப்பட்ட இடங்கள் அடிப்படையிலும், மாணவர் சேர்க்கையை நடத்துவதை உறுதி செய்ய வேண்டும்*கல்லுாரிகளில் உள்ள முதுநிலை மருத்துவ படிப்பு இடங்களை அறிவிக்கும் போதே, ஒவ்வொரு கல்லுாரியும், கட்டண விபரங்களையும் வெளியிடலாம்*100 படுக்கைகள் உடைய மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் மட்டுமே, உள்ளுறை பயிற்சி பெற அனுமதி இருந்தது; இனி, 50 படுக்கைகள் உடைய மருத்துவமனைகளிலும் பயிற்சி பெறலாம்.இவ்வாறு வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வழிகாட்டுதலின்படி, இந்தாண்டில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் விபரங்கள், படிப்பின் விபரம், இடஒதுக்கீடு விபரம் உள்ளிட்ட வற்றை, ஆணையத்தின் மருத்துவ கல்லுாரிகளுக்கான தெரிவு பகுதியில் பதிவேற்றவும், தேசிய மருத்துவ ஆணையம், கல்லுாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளது.