உள்ளூர் செய்திகள்

குவியும் வேலைவாய்ப்பு; சண்டிகர் பல்கலை தகவல்

சென்னை: இன்ஜினியரிங் மட்டுமின்றி, அனைத்து துறை மாணவர்களுக்கும், உயர்ந்த சம்பளத்தில் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாக, சண்டிகர் பல்கலை தெரிவித்துள்ளது.இதுகுறித்து, சண்டிகர் பல்கலையின் வேந்தர் சத்னம்சிங்சந்து கூறியதாவது:சர்வதேச அளவிலான, கியூ.எஸ். தரவரிசை பட்டியலில், ஆசியாவில் முன்னிலை பல்கலைகளில் சண்டிகர் பல்கலை இடம் பெற்றுள்ளது. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு, 904 பிரபல நிறுவனங்கள் சார்பில், 9,124 வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. இன்ஜினியரிங் மட்டுமின்றி, மேலாண்மை, வணிகவியல், ஹோட்டல் மேலாண்மை, பார்மசி, பயோடெக்னாலஜி போன்ற எல்லா துறையை சேர்ந்த முன்னணி நிறுவனங்களும் வேலைவாய்ப்புகள் வழங்கியுள்ளன.கடந்த ஆண்டில் நடந்த வளாக நேர்காணலில், மாணவர்களுக்கு அதிகபட்சமாக 1.74 கோடி ரூபாய் ஆண்டு சம்பளத்துக்கு சர்வதேச நிறுவனத்தின் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. ஆண்டுக்கு, 54.75 லட்சம் ரூபாய் அளவுக்கு இந்திய நிறுவனங்களில் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. இவ்வாறு கூறினார். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்