மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு; வித்யாவரிதினி உருவாக்கம்
பெங்களூரு: உயர்கல்வி படிக்கும் மாணவர்கள், கல்வி உதவி மற்றும் வேலை வாய்ப்பு ஏற்படுத்த வித்யாவரிதினி தரவு தளம் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இ - கவர்னன்ஸ்* மாநில அரசின் ஐந்து வாக்குறுதி திட்டங்கள், குடும்பா மென்பொருள் மூலம், மூன்று மாதங்களில், 5 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர். நடப்பாண்டு 36,000 கோடி ரூபாய் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்* உயர்கல்வி படிக்கும் மாணவர்கள், கல்வி உதவி மற்றும் வேலை வாய்ப்பு ஏற்படுத்த வித்யாவரிதினி தரவு தளம் உருவாக்கப்படும்* நிர்வாக அமைப்பை வலுப்படுத்த, ஏ.ஐ., என்ற செயற்கை நுண்ணறிவு நிர்வாகம் அமைக்கப்படும்* அரசின் அனைத்து துறை தரவு தளத்தில், சைபர் குற்றங்கள் நடக்காமல் தடுக்க, வரும் நாட்களில் பாதுகாப்பு செயல்பாட்டு மையத்தின் கீழ் கொண்டு வரப்படும்*சகாலா திட்டத்தின் கீழ் இருந்த 922 குடிமக்கள் சேவைகளில், 493 சேவைகள் &'சேவா சிந்து&' இணையதளத்தில் சேர்க்கப்பட்டு உள்ளது. வரும் நாட்களில் படிப்படியாக மற்ற சேவைகளும் சேவா சிந்து இணையதளத்தில் சேர்க்கப்படும்* கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்து அனைத்து அரசு அலுவலகங்களிலும் இ - அலுவலக விண்ணப்பங்கள் முறை கொண்டு வரப்படும்*கன்னடர்கள் மற்றும் கன்னடர்கள் அல்லாதோர் நலனுக்காக கன்னட மொழியில் மொழிபெயர்ப்பதில் உள்ள தடைகளை நீக்க கன்னட கஸ்துாரி மொழிபெயர்ப்பு மென்பொருள் சீரமைக்கப்படும்.