உள்ளூர் செய்திகள்

பெண் பயணியருக்கு மெட்ரோவில் பிரத்யேக எண்

சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில், பெண் பயணியரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், பிங்க் ஸ்குவார்ட் எனும் பெண் பாதுகாவலர்கள் உள்ளிட்ட பல முயற்சி எடுக்கப்படுகிறது.அந்த வரிசையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், 155370 என்ற பிரத்யேக உதவி எண், நேற்று அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.இந்த உதவி எண், பி.எஸ்.என்.எல்., நெட்வொர்க்கில் மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளது. மற்ற நெட்வொர்க்குகளுடன் செயல்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன என, சென்னை மெட்ரோ ரயில் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்