உள்ளூர் செய்திகள்

ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வு பயிற்சி

நாமக்கல்: ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வுக்கான பயிற்சிக்கு, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த, 15 மாணவ, மாணவியர், 45 நாள் பயிற்சிக்கு, சென்னை அனுப்பி வைக்கப்பட்டனர்.நாமக்கல் மாவட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில், பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவியர், கடந்த ஜன.,யில், ஜே.இ.இ., முதன்மை தேர்வு எழுதினர். அதில் பெற்ற மதிப்பெண் மூலம், 7 மாணவர்கள், 6 மாணவியர், 2 மாற்றுத்திறனாளிகள் என, மொத்தம், 15 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு, ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வு எழுதுவதற்கான இலவச பயிற்சி முகாம், சென்னை செங்கல்பட்டில் உள்ள, டிரேடு பெசிலிசேஷன் மையத்தில் மே, 23 வரை, 45 நாட்கள் நடக்கிறது.இப்பயிற்சியில், மாணவர்களுக்கு இயற்பியல், கணிதம், வேதியியல் ஆகிய பாடங்களில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு, ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வுக்கு தயார்படுத்தப்படுகின்றனர். தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவியர், நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து, பஸ்சில் வழியனுப்பி வைக்கப்பட்டனர். முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, உதவி திட்ட அலுவலர் பாஸ்கரன் உள்ளிட்டோர், மாணவர்களுக்கு வாழ்த்துக்கூறி வழியனுப்பி வைத்தனர்.சென்னை சென்ற பஸ்சில், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த, 11 பேர், நாமக்கல் மாவட்டத்தில், 15 பேர், பெரம்பலுார் மாவட்டத்தில், 11 பேர் என, மொத்தம், 37 மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளி மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்