கிருஷ்ணம்மாள் பள்ளியில் ஸ்போர்ட்ஸ் கோட்டா தேர்வு
கோவை: கிருஷ்ணம்மாள் பள்ளியில் விளையாட்டு வீராங்கனைகளுக்கான, ஸ்போர்ட்ஸ் கோட்டா தேர்வு வரும், 29ம் தேதி நடக்கிறது.கல்லுாரிகளில் அளிப்பது போல், பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் மாணவியருக்கு, இலவச ஸ்போர்ட்ஸ் கோட்டா சீட் வழங்கப்படுகிறது.இத்தேர்வில், மாநில் அளவிலான பள்ளி விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற, மாணவியர் பங்கேற்கலாம். தேர்வின் அடிப்படையில் ஆறு முதல் 11ம் வகுப்பு மாணவியருக்கு, உணவு மற்றும் விடுதி வசதிகளும் அளிக்கப்படுகின்றன.எனவே, தடகளம், கூடைப்பந்து, வாலிபால், இறகுப்பந்து மற்றும் தனி நபர் விளையாட்டுகளில் திறமை வாய்ந்த மாணவியர், இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு, 94438 20038 என்ற எண்ணில் அழைக்கலாம்.